script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

சேலத்தில் கிரிக்கெட் மைதானம் அமைத்த நடராஜன்! ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!

Jun 24, 2023, 10:45 AM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் நடராஜன் சேலம் சின்னப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கிராமப்புற பகுதியில் உள்ள இளைஞர்களின் கிரிக்கெட் திறமைகளை வெளிகொண்டு வரவேண்டும் என்று எண்ணி நடராஜன் கிரிக்கெட் அகாடமி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் இருக்கும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெளிகொண்டு வருவதற்காக இந்த அமைப்பின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் சேலம் சின்னப்பம்பட்டி பகுதியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை துவக்குவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வீரர் நடராஜன் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கிரிக்கெட் மைதானம் தயாரான நிலையில் இன்றையதினம் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நேரில் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் மைதானத்தை பார்வையிட்டார். பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினேஷ், கார்த்திக் நடராஜன் மற்றும் தமிழ்நாடு திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் புதிதாகத் திறந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி அசத்தினர்.