script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

அரசால் சீல் வைக்கப்பட்ட மதுபான கடையில் படுஜோராக நடைபெறும் சரக்கு வியாபாரம்

Jan 23, 2024, 6:32 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாநாடு பந்தலின் சுற்று வட்டார பகுதிகளில் அரசு மதுபான கடைகள் இயங்கத்தடை விதிக்கப்பட்டது. இதனிடையே வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் 7468, 7247 என்ற இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வந்ததுள்ளன.

மாநாட்டிற்கு வந்த திமுக கட்சி தொண்டர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு  மதுபான கடையில் மதுபானம் வாங்க அதிகமான கூட்டம் சேர்ந்ததால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் அதிரடியாக உத்தரவை மீறிய மதுபான கடைக்கு சீல் வைத்து இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதையடுத்து பூட்டிய நிலையில் உள்ள அரசு மதுபான கடையின் அருகில் சந்துகடையில் அதிகாலை முதலே கள்ளத்தனமாக மதுபானம் அதிக விலைக்கு ஜோராக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்து கடை நடத்தும் நபர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.