சேலத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி; கூட்டம் அலைமோதியதால் தள்ளு முள்ளு

Dec 9, 2023, 8:07 PM IST

சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் காசக்காரனுர் பகுதியில் இன்று புதியதாக பிரியாணி கடை ஒன்று துவக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பத்து ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடை திறக்கப்பட்டதும் பத்து ரூபாய் நாணயத்துடன் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். 

தொடர்ந்து பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்து சிக்கன் பிரியாணி வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போட்டி போட்டுக் கொண்டு பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்து சிக்கன் பிரியாணி வாங்கி சென்றனர்.

பெரும்பாலான கடைகளில் மற்றும் வணிக நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதால் அனைவரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக உரிமையாளர் விஜய் தெரிவித்துள்ளார்.