அரசுப் பேருந்தில் தீ விபத்து; நடு ரோட்டில் அலறியடித்து ஓடிய பயணிகள் - சேலத்தில் பரபரப்பு

அரசுப் பேருந்தில் தீ விபத்து; நடு ரோட்டில் அலறியடித்து ஓடிய பயணிகள் - சேலத்தில் பரபரப்பு

Published : Oct 24, 2023, 06:42 PM IST

சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சேலத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்து கருமத்தம்பட்டி தெக்கலூர் எலச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும் புகை கிளம்பியதைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக பயணிகளை பேருந்தில் இருந்து இறங்குமாறு எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு விரைவாக கீழே இறங்கிய நிலையில்  பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு அதிகாரிகள் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புகை கிளம்பியதும் சாதுர்தமாக வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டதால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாத்கிப்பும் ஏற்படவில்லை.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more