Mar 21, 2023, 1:59 PM IST
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதிகளில் ஆமை முட்டைகள் திருட்டை தடுக்கும் வண்ணம், வனத்துறை சார்பில் ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அவைகள் குஞ்சு பொறித்ததும் பாதுகாப்பாக கடலில் விடும் பணிகளையும் வனத்துறையின் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு வனத்துறையினர் ஆமைகளின் இனப்பெருக்க காலமான டிசம்பர் 20ம் தேதி முதல் இன்று வரை 127 இடங்களிலிருந்து சுமார் 14,020 முட்டைகளை சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்து வருகின்றனர். இதுவரை குஞ்சு பொறித்து வெளிவந்த 2,143 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்
335 ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.