தெப்பகாடு சாலையில் குட்டிகளுடன் உலாவந்த  காட்டுயானை கூட்டம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தெப்பகாடு சாலையில் குட்டிகளுடன் உலாவந்த காட்டுயானை கூட்டம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published : Apr 22, 2023, 03:54 PM IST

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு சாலையில் காட்டு யானைகள், குட்டிகளுடன் உலா வருவதை வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் பகுதியில் பிரதான  சாலையோரத்தில் உணவு தேடியும், மாயாற்றில் தண்ணீர் குடிக்கவும்  யானைகள் கூட்டம், கூட்டமாக வந்தன. வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விரும்பி உண்ணும் உணவுகள்  குறைந்து காணப்படுகிறது. இது தவிர வனவிலங்குகளுக்கு எதிரான லாண்டனா என்கிற  உண்ணிச்செடிகள் அதிகரித்துள்ளது.

இதனால் யானைகள் உணவு தேடி கூடலூரில்  இருந்து மைசூர் செல்லும் முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் பகுதியை ஒட்டியுள்ள  சாலையோரத்தில் முகாமிட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்கிறார்கள். சிலர் ஆபத்தை உணராமல் வாகனங்களில் இருந்து இறங்கி  செல்போனில் படம் எடுத்தும் செல்கின்றனர்.

இதனையடுத்து சுற்றுலா பயணி மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்