உதகையில் பாரம்பரிய உடை அணிந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்த தோடர் இன மக்கள்

Dec 27, 2023, 8:16 PM IST

உதகை பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள பவாணீஸ்வரர் திருக்கோவிலின் 112ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோட்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் விழா இன்று நடைப்பெற்றது. ஸ்ரீபவாணீஸ்வரர் கோவிலில் சிவன் கோவில்களில் நடைபெறுவது போல் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன விழா, கடந்த 1910ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

இந்த பாவணீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான 112வது ஆருத்ரா மஹோட்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருத்தேர் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. பவாணீஸ்வரர் கோவிலில் இருந்து திருத்தேரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா வடம் பிடித்து துவக்கி வைத்தார். 

திருதேருக்கு முன்பு நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனம் ஆடி தேரை இழுத்து வந்தனர். உதகை மாரியம்மன் கோவில் பகுதியில் மண்ணின் மைந்தர்கள் என அழைக்கப்படும் தோடர் இன மக்கள் தங்களது கலாசார உடை அணிந்து பாரம்பரிய நடனம் ஆடியதை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். இந்த தேர்திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.