குன்னூரில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாவட்டச் செயலாளர் உதகை சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வயல்வெளிகள் மற்றும் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசை கன்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மாவட்ட செயலாளர் உதகை சிவா, மாவட்டத் தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.