800 ஜோடிகளுக்கு தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் வழங்கி... கூடலூரில் கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ கல்யாணம்

800 ஜோடிகளுக்கு தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் வழங்கி... கூடலூரில் கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ கல்யாணம்

Published : Feb 26, 2023, 01:41 PM IST

பாடந்துறை மார்க்ஸ் சார்பாக 800 ஜோடிகளுக்கு கூடலூர் பாடந்துறை பகுதியில் கோலாகலமாக சமத்துவ கல்யாணம் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ளது பாடந்துறை மார்க்ஸ் இது 1993 ஆம் ஆண்டு துவங்கி கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது பாடந்துறை மார்க்ஸ். இது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் பாரம்பரிய பள்ளிவாசல் மற்றும் அனாதை ஆசிரமம் மற்றும் பள்ளிகள் இங்கு உள்ளன. பாடந்துறை மார்க்ஸ் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்,

தேவர் சோலை அப்துல் சலாம் முஸ்லியார் தலைமையில் அபூபக்கர் முஸ்லியார் ஆகியோரின் முயற்சியாலும் இதுவரை 30 ஆண்டுகளில் நான்கு முறை சமத்துவ திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன, பாடந்துறை மார்க்ஸ் சார்பாக 2014ஆம் ஆண்டு முதல்  ,2017,2019, வரை 1200 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான சமத்துவ கல்யாணம் இன்று நடைபெற்றது. இதில் 800 ஜோடிகளுக்கு இலவசமாக ஐந்து பவன் தங்க நகையுடன் துணிகள் மற்றும் பொருட்கள் என்று ஒரு ஒரு ஜோடியினருக்கு தலா இரண்டரை லட்சம் செலவில் நடத்தப்படுகிறது,

இந்த திருமணத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம் ஆனால் மணமகன், மணமகள் குறித்து தீர விசாரித்த பின்னர் சமத்துவ கல்யாணத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்று பாடந்துறை மர்க்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேபோல் அவரவர் மதத்தின் அடிப்படையில் ஹிந்துக்கள் ஹிந்து கோயில்களில் திருமணம் செய்துவிட்டு இங்கு வந்து கலந்து கொள்ளலாம். அதேபோல் கிறிஸ்தவர்களும் அவர்களது சர்ச்சுகளில் திருமணத்தை நடத்தி விட்டு கலந்து கொள்ளலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த பாடந்துறை மார்க்ஸ் ஆசிரமத்தில் தாய் தந்தையை இழந்தோர் சுமார் 800 மாணவ மாணவியர்கள் ஹாஸ்டலில் தங்கி படித்து வருவதாகவும் மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் வெளியில் இருந்து இப்பள்ளியில் படிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த சமத்துவ திருமண நிகழ்ச்சியில் ஏராளமான ஏழை எளியோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த பாடந்துறை மார்க்ஸ் ஒரு சேவையாகவே இந்த ஆசிரமத்தையும் நடத்தி வருகின்றனர். இதில் தாய் தந்தை இழந்த மாணவ மாணவியர்கள் பலரும் பயன்பெற்று வருகின்றனர் இறுதியில் அனைவருக்கும் திருமண விருந்துகள் வழங்கப்பட்டது

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்
Read more