Aug 5, 2023, 10:04 PM IST
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார். மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசனகுடி பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு மூன்று முப்பது மணிக்கு வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக பலத்த பாதுகாப்புடன் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்தடைந்தார்.பின்பு தி எலிபன்ட் விஸ்பரஸ் குறும்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்தித்தார்.
பிறகு முகாமில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றினார். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பின்பு மாலை 5:30 மணிக்கு தெப்பக்காடு முகாமில் இருந்து சாலை மாற்றமாக மசனகுடி வந்தடைந்து, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!