நீலகிரியில் நவராத்திரி தொடக்க விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் தீ காயம் ஏற்பட்டதால் பரபரப்பு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் சரண் நவராத்திரி விழாவினை முதல் நாளான நேற்று பூஜ்யஸ்ரீ குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சாகசம் செய்ய முயன்ற பெண் ஒருவருக்கு தீ பற்றியது. எதிர்பாராத விதமாக சிறு காயங்களுடன் பெரு அசம்பாவிதம் நடக்காமல் உயிர் தப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.