Sep 15, 2023, 11:19 AM IST
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 60 சதவீதம் வன பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் அண்மை காலமாக உதகை நகராட்சிக்கு உட்பட்ட எச்.பி.எப், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, ரோஸ்மவுண்ட், எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. குடியிருப்புகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடந்த காட்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வனத்துறையினர் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.