Oct 26, 2022, 4:37 PM IST
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் வழக்கு விசாரணை சிபிசிஐடி க்கு அண்மையில் மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு சம்மந்தமாக கடந்த ஒருவருட காலமாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,316 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட அறிக்கை மற்றும் சசிகலா, நடராஜன்,விவேக்,கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை போஜன் உட்பட 316 பேரிடம் இவ்வழக்கு சம்மந்தமாக பலரிடம் விசாரனை நடைபெற்ற நிலையில், இதன் அறிக்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த வந்த நீதிபதி முருகன் மற்றும் சிபிசிஐடி புலனாய்வு அதிகாரி டிஜிபி ஷக்கில் அக்தரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனடிப்படையில் இவ்வழக்கு விசாரணையை மீண்டும் முதலில் இருந்து துவங்க சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் திட்டமிடப்பட்டு இன்று சம்பவம் நடைபெற்ற கோடநாடு எஸ்டேட் பங்களாவில் விசாரணை நடைபெற்று வருகிறது.பங்களாவில் மேலாளர், காசாளர், காவலாளிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்டேட்டில் பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தையிடம் விசாரணை நடத்தவும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாமினில் வெளியில் உள்ள கேரளாவை சேரந்த சயான், வாளையார் மனோஜ், உதயகுமார், ஜித்தின் ஜாய்,ஜம்சீர் அலி உட்பட 10 பேரிடமும் மற்றும் வாகன விபத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் விசாரணை மேற்க் கொள்ள உள்ளனர்.தற்போது ஐந்து வாகனங்களில் வந்து கோடநாடு எஸ்டேட் பங்களாவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் மீண்டும் கோடநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா