நீலகிரியில் பகல் நேரத்தில் சாலையோரம் குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரியில் பகல் நேரத்தில் சாலையோரம் குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

Published : Dec 15, 2023, 03:47 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் இரண்டு குட்டிகளுடன் உலா வரும் யானைக் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக பருவ மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வனப்பகுதி மற்றும் சாலையோர வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்கும் வகையில் வனப்பகுதி மற்றும் சாலையோர வனப்பகுதி பசுமை நிறைந்து காணப்படுகிறது. 

இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம், காட்டேரி பூங்கா அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டங்கள் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரத்தொடங்கி உள்ளன. 

அந்த வகையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மூன்று  குட்டிகளுடன் உலா வரும் யானைக் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் உலா வரும் யானைக் கூட்டத்தை எவ்வித தொந்தரவும் செய்யாமல் மலைப்பாதையில் பயணிக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்