கூடலூர் அருகே எருமை மாட்டை கடித்து குதறிய செந்நாயால் மக்கள் பீதியடைந்துள்ளனர். செந்நாயை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் புலி மற்றும் சிறுத்தைகள் செந்நாய்கள் போன்றவை வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்வதும் மனிதர்களை தாக்குவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
கூடலூர் அருகே உள்ள உப்பட்டி சேலைக்குன்னா பகுதியில் (5) வயது மதிக்கதக்க வளப்பு எருமை மாட்டினை செந்நாய்கள் கடித்து கொன்று தின்றுவிட்டதாக எருமை மாட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வனச்சரகர் ரவி மற்றும் வனவர் பெலிக்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செந்நாய் கூட்டம் கடித்து தின்றது உறு செய்ப்பட்டது. பின்பு கால்நடை மருத்துவர் ராஜராஜன் வரவழைக்கப்பட்டு பரிசோதனைக்கு பிறகு எருமை மாட்டின் உடலை அங்கேயே அடக்கம் செய்தனர். செந்நாய் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட வனத்துறையில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.