முதுமலை வனப்பகுதியில் காட்டெருமையை வேட்டையாட துரத்திய புலியின் வீடியோ காட்சிகளை பதைப்பதைப்புடன் சுற்றுலா பயணிகள் படம் பிடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளை காண நாள்தோறும் ஏராளமான சுற்றலா பயணிகள் வருகின்றனர். வனப்பகுதிகளுக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் யானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளை காண்கின்றனர். குறிப்பாக மாமிச விலங்குகள் வேட்டையாடுவதை காண்பது மிகவும் கடினம் மேலும் அதுபோன்ற சம்பவங்கள் காணக் கிடைத்தால் மெய்சிலிர்க்கும் வகையில் அச்சம்பவம் அமையும். அதுபோல் முதுமலை வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வாகனத்தின் உள்ளே இருந்துகொண்டு வனவிலங்குகளை கண்டு ரசித்துக்கொண்டிருந்த போது, புலி ஒன்று காட்டெருமையை துரத்தி வேட்டையாட முயலும் காட்சியை வீடியோ பதிவு செய்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் காட்டெருமை புலியிடமிருந்து தப்பியது தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது