உடுமலை அருகே வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் ஒற்றை காட்டு யானை

உடுமலை அருகே வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் ஒற்றை காட்டு யானை

Published : Sep 05, 2023, 10:04 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து வனப்பகுதி வழியே மூணாறு செல்லும் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக சுற்றுலாபயணிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

அமராவதி உடுமலை வனச்சரகங்களில்  யானைகள், மான்கள், காட்டெருமைகள், உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடைகாலத்தில் யானைகள் இடம் பெறுவது அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் தற்பொழுது மழை பொழிவும் குறைவாக இருப்பதால் வனப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல துவங்கி உள்ளன. மேலும் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை சாலையில் நின்று உலா வருகிறது. ஒற்றை அணை  கோபமாக இருக்கும் என்பதால் அதனை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஹாரன் அடிக்கக்கூடாது, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்