Mar 23, 2023, 10:09 PM IST
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதி கடும் வெயில் காரணமாக வறண்ட நிலையில காணப்படுவதால் காட்டு யானைகளுக்கு சரியான உணவுகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிக்கு அடிக்கடி காட்டு யானைகள் படையெடுக்கின்றனர்,
இந்நிலையில் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி மூன்று காட்டு யானைகளும் சாலை கடப்பதால் வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகளுக்கு வழி விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது,
இந்நிலையில் பருவ மழை பெய்தால் மட்டுமே மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதியில் மரம் செடி கொடிகள் பசுமை தென்படும் பின்பு யானைகள் தானாகவே தனது சொந்த இருப்பிடத்திற்கு சென்று விடும் அதுவரை குன்னூர் வனத்துறையினர் யானையின் பின்னால் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.