Watch : கோத்தகிரியில் பள்ளி அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு!

Mar 1, 2023, 4:41 PM IST

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் காட்டு விலங்குகள் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இதில் குறிப்பாக கரடிகளின் தொல்லை பெருமளவு அதிகரித்துள்ளது.

காரணம் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளில் மீதமாகும் உணவுகளை குப்பை தொட்டியில் போடாமல் வீட்டின் அருகிலேயே கொட்டிவைப்பதால் அந்த உணவு பொருட்களை தேடியும், ஓட்டல்களில் மீதமாகும் உணவுகளை சாலைகளில் கொட்டுவதால் கடைப்பகுதிகளுக்கு கரடி போன்ற வன விலங்குகள் வருவதும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.



இந்நிலையில், கோத்தகிரியை அடுத்த அரவேனு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று உலா வந்து கொண்டு இருந்தது. அங்கு சாலையில் நின்றிருந்தவர்கள் அதனை வனப்பகுதிக்குள் துரத்தவே அது அங்கிருந்து போகாமல் வெகு நேரம் அப்பகுதியிலேயே சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் அந்த கரடி அருகில் இருந்த புதரினுள் சென்று மறைந்தது.