Watch : போக்சோ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டதும் தப்பி ஓடிய கைதி - நீதிமன்றத்தில்  பரபரப்பு!

Watch : போக்சோ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டதும் தப்பி ஓடிய கைதி - நீதிமன்றத்தில் பரபரப்பு!

Published : Nov 02, 2022, 01:10 PM IST

மதுரையில், போக்சோ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட தப்பி ஓடிய கைதி நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
 

மதுரைமாவட்டம் உத்தப்பநாயக்கனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட நடுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் (28).இவர் கடந்த 2017-ல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் சுரேஷை உத்தப்ப நாயக்கனூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்காக நீதிமன்றத்தில் சுரேஷ் ஆஜராகியிருந்தார். நீதிமன்றம் கூடியதும் சுரேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ,000 அபராதம் விதிப்பதாக நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பை வாசித்தார்.

இதை கேட்டதும் நீதிமன்றத்தில் நின்றிருந்த சுரேஷ் நீதிமன்றத்திலிருந்து வெளியே ஓடினார்.அவரை பிடிக்க நீதிமன்ற ஊழியர்கள் பின்தொடர்ந்து ஓடினர். இருப்பினும் சுரேஷ் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார். அவரை மதுரை அண்ணாநகர் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறப்பு நீதிமன்றத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Nagercoil Kasi Harassment Case : கையாலேயே ஆர்ட் விட்ட காசியின் தற்போதைய பரிதாப நிலைமை!
00:54Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!
01:18Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்
00:38சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி
01:56FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை
01:28Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்
04:10ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
01:38உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
03:13மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..
Read more