மதுரை மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுரை பசுமலை பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை உசிலம்பட்டி தாலுகா மையம்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டி (வயது 23) படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மதுரை தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.