Watch : திருட்டு மாடுகளுடன் தில்லாக டீசல் போடும் வடமாநில கொள்ளை கும்பல்?  சி.சி.டி.வி., காட்சியில் அம்பலம்!

Watch : திருட்டு மாடுகளுடன் தில்லாக டீசல் போடும் வடமாநில கொள்ளை கும்பல்? சி.சி.டி.வி., காட்சியில் அம்பலம்!

Published : Dec 13, 2022, 12:37 PM IST

திருடிய கால்நடைகளை வண்டியில் வைத்துக் கொண்டே மதுரை பெட்ரோல் பங்கில் டீசல் போடும் காட்சி வைரலாகி வருகிறது. போலீசார் இவர்களை உடனடியாக கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
 

மதுரை மாநகர் மற்றும் முக்கிய சாலைப் பகுதிகளில் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விடுவதால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. அதே போல் ஆதரவற்ற கால்நடைகளும் சாலை ஓரங்களில் படுத்து விபத்திற்கு காரணமாக மாறுகிறது. இவ்வாறு விபத்துக்கள் ஒரு பக்கம் அரங்கேறி வரும் சூழலில் கால்நடைகளை திருடும் சம்பவங்களும் மற்றொரு பக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சாலை ஓரம் படுத்திருந்த மாட்டை கொள்ளையர்கள் திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை விளாச்சேரி பகுதியில் மாடு ஒன்று சாலை ஓரம், படுத்திருந்தது இதனை கொள்ளையர்கள் சிலர் தங்களது மாட்டை அழைத்துச் செல்வது போல் இழுத்துச் சென்றனர்.

இதையடுத்து இந்த மாட்டை இரண்டு நாட்களுக்கு முன் உரிமையாளர் மீட்டுவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் மாட்டை திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கால்நடைகளை திருடிச்செல்லும் வட மாநில இளைஞர்கள் பெட்ரோல் பங்கில் மாடுகளை வண்டியில் வைத்துக் கொண்டே டீசல் போடும் காட்சி வெளியாகியுள்ளது.

அதில் மாட்டை திருடிய கும்பலை சேர்ந்த இளைஞர் அச்சத்துடன் சி.சி.டி.வி.,யை கண்காணிக்கும் காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவர்களை பிடித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 

Nagercoil Kasi Harassment Case : கையாலேயே ஆர்ட் விட்ட காசியின் தற்போதைய பரிதாப நிலைமை!
00:54Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!
01:18Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்
00:38சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி
01:56FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை
01:28Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்
04:10ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
01:38உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
03:13மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..