அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறை அதிகாரியுடன் மேயர் கவிதா கணேசன் உள்பட திமுக தொண்டர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், அவரது உறவினர்கள் வீடுகள் என சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கும் அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர்.
அவ்வாறு சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளிடம் கரூர் மாநகராட்சி மேயர் உள்பட திமுக தொண்டர்கள் அதிகாரிகளை மறித்துக் கொண்டு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.