கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் அமைந்துள்ள சுற்றுவட்டச் சாலையில் ஆட்டோ ஒன்று வளைவில் சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை ஐயம்பெருமாள் என்பவர் ஓட்டினார். அப்போது அவழியாக தந்தை ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்த நிவேதன், அவரது மனைவி பவித்ரா, 2 வயது குழந்தை ஆகிய மூன்று பேர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் வேகமாக ஆட்டோவில் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கிய நால்வரையும் மீட்டு அருகில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.