May 30, 2023, 7:23 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பதினெட்டாம் படி பகுதியில் பாசன குளங்கள் நெல் வயல்கள் ஏராளமாக உள்ளன. ஜூன் முதல் வாரத்தில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகளுக்காக இப்போதே விவசாயிகள் நெல் வயல்களை அதிகாலையில் சென்று நிலங்களை பக்குவப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிகாலை நெல் வயலில் சாகுபடி பணிகளுக்காக விவசாயிகள் சென்றபோது பதினெட்டாம் படி அருகே சாலையின் குறுக்கே மலை பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றதால் விவசாயிகள் பீதி அடைந்தனர். இப்பகுதியில் உள்ள குளங்களில் மீன்களுக்காக வலை போடப்பட்டுள்ளது எனவே பாம்புகள் அருகில் உள்ள மலைகளில் இருந்து அடிக்கடி அந்த குளங்களுக்கு வந்து செல்கிறது இதனால் அதிகாலை நேரம் நெல் வயல்கள் சாகுபடி பணிகளுக்கு செல்லும் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.