காஞ்சிபுரத்தில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்த்து மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்

காஞ்சிபுரத்தில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்த்து மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்

Published : Jan 22, 2024, 02:00 PM IST

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தபடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அயோத்தியில் ராமர் கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை நேரலையாக பார்த்து மகிழ்ந்தார்.

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக தமிழகம் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், எல்.இ.டி திரை மூலம் அயோத்தியில் நடைபெறும் விழாவை நேரலை செய்ய முன்னரே அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அந்த எல்.இ.டி திரையை அகற்றினர். இதனைத் தொடர்ந்து கோவில்களில் அயோத்தி விழாவை நேரலை செய்ய எந்த அனுமதியும் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீண்டும் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு ராமர் பிரதஷ்டை செய்யும் நிகழ்வானது நேரலை செய்யப்பட்டது.

இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். 

32300:00IPL-லும்.. அதிமுகவும் ஒன்னு தான்.. ஒபிஸ்.. இபிஸ்.. தீபா என்று பல அணிகள் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்!
06:16"புதிய விமான நிலையம்" மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாத அரசு; வயலில் இறங்கிய கிராம மக்கள்
00:46காஞ்சிபுரத்தில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்த்து மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்
02:59காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்மலாசீதாராமன் சிறப்பு வழிபாடு
01:51அரசுப் பேருந்துகளில் மாணவர்கள், இளைஞர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க போக்குவரத்து கழகம் புது முயற்சி
4283:20நாட்டிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே நபர் எங்கள் முதல்வர் - காஞ்சியில் ரோஜா பெருமிதம்
00:38புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
02:02திடீரென கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து; ஆவேசமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள்
01:57காஞ்சிபுரத்தில் மாடு மீது மோதி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு; 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
Read more