டாஸ்மாக் கடையில் பீர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அரசுக்கு கோரிக்கை விடுக்கும் மதுப்பிரியர்கள்

Jan 28, 2023, 11:07 PM IST

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை மாநகரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு மது விற்பனை மிகவும் ஜோராக நடக்கும். மாநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோர், கட்டிட தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள், ஐ.டி நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்குதான் மது வாங்கிவிட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள்.

இந்த நிலையில்  அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவை பெரியகடை வீதி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இக்கடையில் பீர் வாங்கி உள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலை பார்த்த போது அதில் மிகவும் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காசு கொடுத்து வாங்கும் மது வகைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் மதுப்பிரியர்கள்.

இதையும் படிங்க..கள ஆய்வில் முதலமைச்சர்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்சர் !!

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?