பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொம்மை டாஸ்க்கால் ஹவுஸ்மேட்ஸ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆகி கடந்த ஞாயிறன்று வெளியேறினார். அதேபோல் ஜிபி முத்துவும் விலகிவிட்டதால், தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

போட்டியாளர்களுக்கு வார வாரம் டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் ‘நானும் பொம்மை.. நீயும் பொம்மை’ என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். நேற்று மகேஸ்வரி - தனலட்சுமி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், இன்று அசீம், தனலட்சுமியை திட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

அதன்படி போட்டியாளர்களான ஷெரினா மற்றும் நிவாஷினி ஆகியோரை தனலட்சுமி தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டும் அசீம், அவரை ‘நீயும் ஒரு பெண் தானே, உனக்கு அறிவில்லையா’ என திட்டி பேசிய வீடியோ அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சியும் அனல்பறக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ரெட் ஜெயன்டுக்கு விஜய் நோ சொன்னதால்... அஜித்தின் துணிவு படத்தை தட்டித்தூக்கிய உதயநிதி - அப்போ வாரிசு யாருக்கு?

மிஷ்கின் பாட்டுக்கு செம டான்ஸ்; வைரலாகும் பிக் பாஸ் சவுந்தர்யாவின் வீடியோ!
00:22பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?
00:58அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் கொடுத்து சைலன்டாக்கிய பிக் பாஸ் - ஏன்? வீடியோ!
பிக்பாஸில் டைட்டில் ஜெயிக்காமல் டஃப் கொடுத்த பிரபலங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நயன்தாராவின் தங்கச்சி
பிக்பாஸ் சீசன் 8ல் வரப்போகும் பழைய போட்டியாளர்கள் ! வெளியான சூப்பர் அப்டேட்
26600:00Bigg Boss season - 7 Review | இந்த வாரம் Bigg Boss-ல் மாயா நாமினேட் ஆகாததன் பின்னணி என்ன?
583:20bigg boss 6 promo : காலில் விழுந்தும் கேட்காததால் கடுப்பான ஜனனி..குயின்சியை விளாசும் ப்ரோமோ இதோ
583:20நீயெல்லாம் ஜீரோ.... மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம் - மீண்டும் வெடித்த சண்டையால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு
583:20 Bigg Boss Tamil Season 6 Promo : புறக்கணிப்பால் கடுப்பான குயின்சி...விக்ரமனுடன் மோதல் ஆரம்பம்
Read more