தேர்வு எழுதியது 3 லட்சம் பேர் ! பாஸ் பண்ணியது 300 பேர் !! ஆசிரியர் தகுதி தேர்வு ரிசல்ட் !!

By Selvanayagam PFirst Published Aug 22, 2019, 10:05 AM IST
Highlights

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆவது தாள் தேர்வில் ஒரே ஒரு சதவிதம் பேர் மட்டுமே பாஸ் பண்ணியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினார்கள்.

தேர்வு முடிவும், தேர்வுக்கான விடைக்குறிப்பும் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியானது. ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்நிலையில், ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்தன.

ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதிய நிலையில் சுமார் 300க்கும் அதிகமான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  முதல் தாள் தேர்வை போன்று இந்த தேர்விலும் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  99 சதவீதத்தினர் தோல்வி அடைந்துள்ளது ஆசிரியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

click me!