விருதநகர் மாவட்டத்தில் தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்தும், கம்பியால் அடித்தும் கொடூர கொலை; சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறந்த நாளில் தனது குருமார்களுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்ற தொழிலதிபர்
உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்" என மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே விபத்து நடைபெற்றதும் தலைமறைவான குவாரியின் உரிமையாளர் சேது குற்றத்தை உணர்ந்து ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் விபத்து தொடர்பாக பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.