சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 90 பேர் ஒரே நேரத்தில் வாக்களிக்க வந்த சுவாரசியம்

By Velmurugan s  |  First Published Apr 20, 2024, 1:50 PM IST

சிவகாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் வந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர்.


சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பெருமாள்சாமி என்பவரது குடும்பத்தில் 150 பேர் கூட்டுக்குடும்பமாக தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இக்குடும்பத்தில் வாக்குரிமை பெற்ற 90 பேர் மொத்தமாக டிராக்டர், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மம்சாபுரம் அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர். 

Latest Videos

இதேபோல் இக்கிராமத்தில் கூட்டுக்குடும்பமாக உள்ள சக்கமுத்து குடும்பத்தை சேர்ந்த 55 பேரும், வெடிமுத்து குடும்பத்தை சேர்ந்த 40 பேரும் ஒரே நேரத்தில் சென்று வாக்களித்தனர். அரசு 100% வாக்களிப்பை வலியுறுத்தி வரும் நிலையில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் தவறாமல் வாக்களித்துள்ளதாகவும் விவசாய பணிகள் இருந்தாலும் இன்றைய தினம் விவசாய பணியை விடுத்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளதாக கூறுகின்றனர் இக்கூட்டு குடும்பத்தினர். 

சிவகங்கையில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா; மழை வேண்டி வினோத வழிபாடு

கூட்டுக் குடும்பமாய் வாழ்வதோடு மட்டுமல்லாமல் ஒற்றுமையாக சென்று தங்களது ஜனநாயக கடமையையும் ஆற்றிய நிகழ்வு கிராம மக்களிடையே நகிழ்ச்சியையம் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது.

click me!