
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் விருதுநகர் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியில் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
18-வது மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. முன்னதாக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விருதுநகர் தெப்பக்குளம், மேலரத வீதி, அசன் ஓட்டல், ஏடிபி காம்புவுண்டு ஆகிய பகுதிகளில் விஜய பிரபாகரன் சகோதரர் சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரநாத்துடன் பரப்புரை மேற்கொண்டார்.
உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது; அண்ணாமலையின் பதிலால் கூட்டணியில் சலசலப்பு
அப்போது அவர் பேசியதாவது, தன் தந்தையின் மறு உருவமாக மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ள விஜய பிரபாகரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அவர் வெற்றி பெற்றால் மக்களாகிய உங்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவார் என்றார். மேலும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளே பேக்கரியில் டீ போட்டும், வியாபாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்.
மோடியின் ரோஷோவை பார்க்கும் போது இறுதி ஊர்வலம் தான் நியாபகத்திற்கு வருகிறது - சி.வி.சண்முகம் கிண்டல்
பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பெண் ஒருவர் அவரை கன்னத்தை பிடித்து கொஞ்சினார், கட்டிப் அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.