தேர்தல் பிரசாரத்துக்கு இடையே இரண்டு மாத குழந்தைக்கு விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயர் வைத்தார்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் அருப்புக்கோட்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்றைய பிரசாரத்தை துவங்கும் முன்பு, அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சமுதாய உறவின்முறை நிர்வாகிகளை சந்தித்து வரும் தேர்தலில் ஆதரவு கோரினார். மேலும் பாவடி தோப்பு, காந்தி மைதானம், திருநகரம், புதிய பேருந்து நிலையம், சின்ன பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
குருவாயூர் - மதுரை விரைவில் ரயிலில் பாம்பு கடி: இளைஞருக்கு தீவிர சிகிச்சை!
அப்போது பேசிய அவர் இந்த தேர்தலில் ஒரு இளைஞருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “என தந்தை விஜயகாந்த் பிறந்தது ராமனுஜபுரம் தான். நமக்கான பந்தம் விட்டுப் போகவில்லை. இரண்டு முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. இங்கு நெசவாளர்கள் அதிகமாக உள்ளனர் அவர்களுக்காக ஜவுளி பூங்கா கொண்டுவர பாடுபடுவேன். இது என் சொந்த ஊர் நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள். விஜயகாந்த் கனவை நினைவாக்குவதற்காகதான் இந்த பெரிய பொறுப்பை கையில் எடுத்திருக்கிறேன். அதை நான் மட்டும் செய்ய முடியாது. நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது காந்தி மைதானம் பகுதியில் தம்பதியரின் வேண்டுகோளுக்கு இணங்க பிறந்து இரண்டு மாதமான குழந்தைக்கு, விஜய ராமச்சந்திரன் என தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயர் சூட்டினார்.