விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டியிடுவது அதிமுக.விற்கு மிகப்பெரிய பலம்; ராஜேந்திர பாலாஜி தகவல்

By Velmurugan s  |  First Published Apr 6, 2024, 12:14 PM IST

விருதுநகர் தொகுதியில் மற்ற கட்சியினர் பணம் கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி, மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் இணைந்து விஜய் பிரபாகரனை ஆதரித்து திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டு முரசு சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை. இரண்டு கட்சிகளும் பெரிய கட்சி. இரு கட்சிகளின் தலைவர்களும் மக்களால் போற்றப்பட்டவர்கள். இந்த கூட்டணிக்கு மக்கள் அலை அலையாக ஆதரவு தருகிறார்கள். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் பிரச்சனைகளும் வேட்பாளருக்கு அத்துபிடி. 

Tap to resize

Latest Videos

undefined

நேற்று இரவு வரை கட்சிப்பணி ஆற்றிய திமுக எம்எல்ஏ புகழேந்தி அகால மரணம்

பிரச்சினைகள் குறித்து மத்திய அரசிடம் எவை எல்லாம் கேட்டு பெற முடியுமோ அவையெல்லாம் கேட்டு பெறுவார். விருதுநகர் தொகுதியில் கைத்தறி பூங்கா அமைக்கப்படும், எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் செங்கலை காட்டி திரியாமல் அவற்றை விரைவாக விரிவு படுத்த நாடாளுமன்றத்தில் முதல் குரலாக எழுப்பி எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட ஏற்பாடு செய்வார். மக்களுக்கு பிரச்சினையாக இருக்கும் சுங்கச்சாவடியை அகற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து ஏற்பாடு செய்வார். வருங்காலத்தில் சுங்கச்சாவடி இல்லாத ஒரு நிலையை உருவாக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். 

மேலும் எங்கள் வேட்பாளருக்கு மக்களிடத்தில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது. வலது, இடதுமாக நாங்கள் தான் இருக்கிறோம். வலதுபுரத்தில் ராஜன் செல்லப்பா, இடதுபுறத்தில் ராஜேந்திர பாலாஜி. இதிலிருந்து பார்த்தீர்கள் என்றால் கூட்டணி எப்படி பக்கபலமாக இருக்கிறது என்று பார்க்க முடியும். 

5 வருசமா எதுவுமே செய்யாத நீங்க இனிமே என்ன செய்ய போறீங்க? ஜோதிமணிக்கு எதிராக கொந்தளித்த மக்கள்

மக்கள் பிரதிநிதியாக வரக்கூடிய நபர்கள் நல்லது கெட்டதை மக்களை சந்தித்து அவருடன் பழகிக் கொண்டிருக்கிறோம். அதற்கே மக்கள் 1008 கேள்வி கேட்பார்கள். வெற்றி பெற்ற பிறகு நன்றி தெரிவிக்க கூட வராமல் மீண்டும் வேட்பாளராக போட்டியிட்டு வாக்கு கேட்க வந்தால் ஏற்கனவே உள்ள வேட்பாளர்கள், எம்பி களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை. பாஜகவிற்கும் வாய்ப்பில்லை. 

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனே போட்டியிடுவது அதிமுகவிற்கு மிகப்பெரிய பலம். எங்களுடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி. பண அரசியலை வெறுக்கிறோம். அதை செய்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். மற்ற தொகுதி பற்றி எனக்கு தெரியவில்லை. விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை பணம் கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மற்ற தொகுதியிலும் மக்கள் பணத்திற்கு விலை போக வேண்டாம் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுத்து அதற்காக வேலை பார்க்க உள்ளோம் என்றார்.

click me!