விஜயகாந்த் இல்லை என யாரும் ஏங்க வேண்டாம்; அவரது மறுஉருவமாக விஜயபிரபாகரன் வந்திருக்கிறார் - சண்முக பாண்டியன்

By Velmurugan s  |  First Published Apr 13, 2024, 5:03 PM IST

விஜயகாந்த் இல்லை என யாரும் ஏங்க வேண்டாம், என் தந்தையின் மறு உருவம் என் அண்ணன் விஜயபிரபாகரன் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார்.


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அவரது தம்பி சண்முக பாண்டியன் இன்று சிவகாசி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்ட அவர், சிவகாசி அண்ணா காய்கறி சந்தையில் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தனது அண்ணனுக்காக வாக்கு சேகரித்தார். 

பிரச்சாரத்தின் போது பேசி அவர், மக்களின் அன்பும், பாசமும் என்னோட அண்ணனுக்கு ரொம்ப முக்கியம். எங்கள் தந்தை விஜயகாந்திற்கு தேர்தலில் நிற்கும் போது அவருக்கு அன்பு காட்டியது போல் என் அண்ணனுக்கும் அன்பு காட்ட வேண்டும். விஜயகாந்த் இல்லை, அவரை பார்க்க முடியவில்லை என ஏங்குகிறோம். யாரும் ஏங்க வேண்டாம். என் தந்தையின் மறு உருவமாக அண்ணன் விஜயபிரபாகரனே உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

டிரக்ஸ் முன்னேற்ற கழகம்; திமுகவுக்கு புதிதாக பெயர் சூட்டிய நிர்மலா சீதாராமன்

நீங்கள் அனைவரும் அவர்மீது அன்பும், பாசமும் காட்டினால் நமது குரலாக டெல்லியில் பிரச்சினைளை பேசுவார். அவருக்கு ஆங்கிலம், இந்தி தெரியும். சிறப்பாக செயல்படுவார். மாற்றத்தை குடுங்கள், எங்கள் அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்றார். 

பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியையும், உரிமையையும் பெற்று தந்தது திராவிடம் தான் - பொன்முடி

அவர் பேசிக்கொண்டிருந்த போது குழந்தையுடன் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், எனக்கு ஒரு கோரிக்கை என குரல் எழுப்பி, நீங்கள் வெற்றி பெற்றால் தங்கம் விலையை குறைக்க வேண்டும். ஒரு கிராம் 9 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது, எங்களால் தங்கம் வாங்க முடியல என கோரிக்கை விடுத்தார். உடனே தன் அண்ணனால் என்ன செய்ய முடியுமோ நிச்சயம் அவர் டெல்லியில் பேசி மக்களுக்கு செய்வார் என்றார். 

click me!