கடலூர் அருகே மாணவர்களை பிரம்பால் அடித்து காலால் உதைத்த பள்ளி ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடலூர்: கடலூர் அருகே மாணவர்களை பிரம்பால் அடித்து காலால் உதைத்த பள்ளி ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடலூரை அடுத்துள்ள சிதம்பரத்தில் நந்தனார் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர் ஒருவரை அதே பள்ளியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன் என்பவர் பிரம்பால் அடித்து விளாசி உள்ளார். பின்னர் ஆத்திரம் அடங்காமல் காலால் எட்டி உதைத்து தள்ளி இருக்கிறார்.
இந்த கும்மாங்குத்தை அதே வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவர் செல்போனில் ஷூட் செய்து இணையத்தில் பதிவேற்ற…. அவ்வளவுதான்… அங்கிங்கெனாதபடி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை தந்தது.
வீடியோ வைரலானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, ஆசிரியர் சுப்ரமணியன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் விரைவில் கைதாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.