
ADMK- DMDK Relationship: அதிமுகவுடன் நட்பு கொண்டுள்ள தேமுதிக, மாநிலங்களவை சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தது. ஆனால், கடந்த வாரம் சேலம் ஆத்தூரில் பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக நாங்கள் சொன்னோமா? அப்படி ஒரு ஒப்பந்தமும் இல்லை. யாரோ கேட்பது குறித்து என்னிடம் கேட்காதீர்கள்” என்றார்.
எடப்பாடியின் இந்த பேட்டி, தேமுதிக தலைமைக்கு கடும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. எனினும் அக்கட்சி சார்பில் எந்த ரியாக்ஷனும் காட்டப்படவில்லை. எனினும், பொதுவெளியில் செய்தியாளர்களை சந்திக்கும்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் இதுபற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுத்து வந்தார்.
இதனிடையே, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பெயரிலான எக்ஸ் சமூகவலைதளத்தில், ‘சத்தியம் வெல்லும், நாளை நமதே’ என்ற கருத்து பதிவிடப்பட்டு தனது அதிருப்தியை தேமுதிக தலைமை வெளிப்படுத்தியது. பின்ன என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அந்த பதிவை உடனே நீக்கிவிட்டார்கள்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்டா.? கை விரித்த எடப்பாடி - ஷாக்கில் பிரேமலதா
மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக தலைமை மீது கடும் வருத்தத்தில் தேமுதிக தலைமை உள்ளநிலையில், பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவியை தர எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம், திங்களன்று இரவு நடைபெற்றது. இதில், தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன், “அதிமுக -தேமுதிக இடையே என்னமாதிரியான ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். வரும் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் இருப்போம்.
தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை நமக்குள்ளே பகிர்ந்து கொள்ளலாம் என்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த அளவிற்கு இரண்டு கட்சியினரும் ஒன்றுமையாக உள்ளோம். எங்கள் அண்ணியார் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்” என்றார்.
பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்ற ரீதியில் அதிமுக தலைமை பேச்சு நடத்தி இருப்பதாக, மூத்த நிர்வாகி ஒருவரே வெளிப்படையாக பேசியிருப்பது, இரு கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
மாநிலங்களவை சீட் தராமல் அதிமுக நழுவிவிட்டதே என்ற வருத்தத்தில் இருந்த தேமுதிகவினர் மத்தியில் இந்த தகவல் புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
திமுக சாதியையம், மதத்தையும் வைத்து அரசியல் செய்கிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !