ஜெயலலிதா பற்றி பேச டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். எம்எல்ஏவாக கூட தகுதியில்லாதவர் தினகரன். தினகரன் கட்சி நடத்தாமல் கோஷ்டி வைத்து நடத்தி வருகிறார் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

03:27 PM (IST) Nov 25
நடிகர் சூர்யா, பிறந்தநாள் பார்ட்டி ஒன்றியில் கலந்து கொண்டு குத்தாட்டம் போடுவது போல் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் உண்மையில் சூர்யாவா இது? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். வீடியோ பார்க்க...
01:16 PM (IST) Nov 25
சென்னை பள்ளியில் நினைத்துப் பார்க்க
முடியாத கொடுமை நடைபெற்றுள்ளதாகவும், பள்ளிகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
01:00 PM (IST) Nov 25
மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம், ரியா சுமன், முனீஷ்காந்த், புகழ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டுவிட்டர் விமர்சனம். மேலும் படிக்க
12:35 PM (IST) Nov 25
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்று விட்டு ஒவராக நாடகமாடியதால் மனைவி போலீசில் வசமாக சிக்கினார்.
12:34 PM (IST) Nov 25
தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை என தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் கூறியுள்ளார்.
12:33 PM (IST) Nov 25
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர், பாமக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பனையபுரத்தில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.
11:57 AM (IST) Nov 25
தமிழகத்தில் முதுநிலை படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் அதே நாளில் மத்திய அரசு பணிக்கான தேர்வு நடைபெறுவதன் காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
11:57 AM (IST) Nov 25
தமிழகத்தில் முதுநிலை படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் அதே நாளில் மத்திய அரசு பணிக்கான தேர்வு நடைபெறுவதன் காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
11:24 AM (IST) Nov 25
காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையாக மாநில தலைமை செயல்பட கூடாது. இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்த சோனியா, ராகுலுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
10:20 AM (IST) Nov 25
அதிமுக தலைமை அலுவலகத்திற்க்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செல்ல கூடாதுயென நீதிமன்ற உத்தரவோ அரசானையோ உள்ளதா என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
10:15 AM (IST) Nov 25
நடிகை ராஷ்மிகா, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடைவிதிக்க கர்நாடக திரையரங்க உரிமையாளர்களும், கன்னட திரைத்துறையினரும் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
09:39 AM (IST) Nov 25
கோவை ஈஷா ஆதியோகி மையத்திற்கு மங்களூர் ஆட்டோ வெடி குண்டு வழக்கு தீவிரவாதி ஷாரிக் சென்றதாக ஆட்டோ ஓட்டுனர் கூறிய தகவலையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
09:35 AM (IST) Nov 25
நடிகை ஆலியா பட்டிற்கு கடந்த நவம்பர் 6-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை முதன்முறையாக அறிவித்துள்ளார் நடிகை ஆலியா பட். மேலும் படிக்க
09:11 AM (IST) Nov 25
நடிகர் நரேன், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். முதல் குழந்தை பிறந்து 14 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த நரேன் - மஞ்சு ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க
08:55 AM (IST) Nov 25
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
08:55 AM (IST) Nov 25
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:28 AM (IST) Nov 25
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். தனது தாயின் ரியல் கேரக்டரை தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறும் ராதிகா கதாபாத்திரமாக பயன்படுத்தி இருப்பார். அந்த அளவு பாசமான தாயாக இருந்து வரும் மீனாகுமாரி, தனது மருமகள் நயன்தாரா, குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். மேலும் படிக்க
07:56 AM (IST) Nov 25
தமிழக அரசின் ‘நம்ம ஊரு சூப்பரு இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.
07:56 AM (IST) Nov 25
நாக்கு கூசும் அளவிற்கு ஆபாச வார்த்தையால் பேசி சர்ச்சையில் சிக்கி பாஜக மாநில நிர்வாகிகள் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா சமாதானமாகிவிட்டதை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.