பாமக மாவட்ட துணை செயலாளர் கொடூரமாக வெட்டி படுகொலை.. விழுப்புரத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு..
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர், பாமக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பனையபுரத்தில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.
விழுப்புரத்தில் பாமக துணை செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர், பாமக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பனையபுரத்தில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்துக்கொண்டிருந்தார். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.
இதையும் படிங்க;- ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாது.. கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி.. போலீசில் வசமாக சிக்கியது எப்படி?
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆதித்யன் வண்டியை போட்டுவிட்டு அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது சுத்து போட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதித்யன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆதித்யன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியபாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மண் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக உறவினர்களே கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- டியூசனுக்கு வந்த பள்ளி மாணவனை மதுகொடுத்து பலமுறை பலாத்காரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!