Asianet News TamilAsianet News Tamil

விழிப்புணர்வு பதாகை முறைகேடு? இபிஎஸ் புகார்! உண்மை நிலவரம் என்ன? தமிழக அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம்.!

தமிழக அரசின் ‘நம்ம ஊரு சூப்பரு இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். 

namma ooru super project awareness banners.. EPS complaint.. Tamil Nadu Government Explanation
Author
First Published Nov 25, 2022, 7:33 AM IST

விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து  விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் ‘நம்ம ஊரு சூப்பரு இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் “நம்ம ஊரு சூப்பரு இயக்கம்” குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் இன்று செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் காணப்பட்டது.  இந்த தவறான தகவல் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

இதையும் படிங்க;- தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

namma ooru super project awareness banners.. EPS complaint.. Tamil Nadu Government Explanation

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்;- ஊரக பகுதிகளில், ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற “சிறப்பு மக்கள் இயக்கம்” அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும்நெகிழிகழிவுமேலாண்மை, ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திடமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில்தொடங்கப்பட்டது.நம்ம ஊரு சூப்பரு” இயக்கம்,  ஒன்றிய அரசின் “தூய்மையே சேவை” இயக்கத்தோடுஇணைந்து செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது.

நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் குப்பைகள் அதிகம் சேகரமாகியிருந்த 47399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடி மையங்கள், 45,824 அரசு கட்டிடங்கள், 70,011 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 47,949 நீர் நிலைகள், 1,569 கி.மீ அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு 4.36 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நம்மஊருசூப்பரு இயக்கத்தின் செலவினங்கள் ஒன்றிய நிதிக்குழு மானியம் அனுமதித்துள்ள வரையறுக்கப்பட்ட நிதியில் இரண்டு சதவீதம் நிர்வாக செலவின தொகுப்பிலிருந்தோ அல்லது பொது நிதியிலிருந்தோ மேற்கொள்ள ஆணையர், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க;- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.! ஆளுநர் ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.! எடப்பாடி பழனிசாமி

namma ooru super project awareness banners.. EPS complaint.. Tamil Nadu Government Explanation

விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (அதாவது 6x4, 12x8, 10x8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்குபுறம்பான தகவல் ஆகும். இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் (சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, புகாரில் பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன் நியமனம்.. அதிமுகவில் இருந்து வந்த விஜிலா சத்யானந்துக்கு முக்கிய பதவி

Follow Us:
Download App:
  • android
  • ios