Published : Mar 30, 2023, 07:09 AM ISTUpdated : Mar 30, 2023, 06:18 PM IST

Asianet Tamil News Live: பல்லை பிடுங்கிய விவகாரம்... ஏப்.10க்குள் புகார் அளிக்க ஆணை!!

சுருக்கம்

நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் வேறு யாரேனும் இருந்தால், ஏப்.10 ஆம் தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Asianet Tamil News Live: பல்லை பிடுங்கிய விவகாரம்... ஏப்.10க்குள் புகார் அளிக்க ஆணை!!

02:32 PM (IST) Mar 30

ரஜினிக்கு ஜோடியா ஒரு படம் தான் நடிச்சேன்... என் கெரியரே குளோஸ் ஆகிடுச்சு - மனிஷா கொய்ராலா ஓபன் டாக்

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாபா திரைப்படம் தோல்விப் படம் அல்ல அது ஒரு டிசாஸ்டர் என சமீபத்திய பேட்டியில் மனிஷா கொய்ராலா பேசி உள்ளார். மேலும் படிக்க

01:45 PM (IST) Mar 30

ரஜினி பேமிலிக்கு ஒரு சட்டம்... நரிக்குறவர்களுக்கு ஒரு சட்டமா? ரோகினி தியேட்டரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காததற்கு ரோகினி நிர்வாகம் கொடுத்த புதிரான விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் யு/ஏ சான்றிதழுக்கு என்ன விளக்கம் என்பதை பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் படிக்க

01:28 PM (IST) Mar 30

சில்லு சில்லாய் சிதறிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. கண்ணன் - ஜீவாவை தொடர்ந்து இவரும் வெளியேறுகிறாரா?

பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கடந்த ஒரு வாரமாகவே எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஜீவா - கண்ணனைத் தொடர்ந்து, மற்றொரு சகோதரரும் 'பாண்டியன் ஸ்டோர்' குடும்பத்திலிருந்து வெளியேறுகிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது வெளியாகி வரும் புரோமோக்கள். மேலும் படிக்க 
 

01:05 PM (IST) Mar 30

EVKS இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

12:56 PM (IST) Mar 30

கலைகள் அனைவருக்கும் சொந்தமானது... நரிக்குறவர்களை தியேட்டரில் தாமதமாக அனுமதித்ததற்கு ஜிவி பிரகாஷ் கண்டனம்

ரோகினி தியேட்டரில் நரிக்குறவர்களை முதலில் அனுமதிக்க மறுத்து பின் தாமதமாக படம் பார்க்க அனுப்பிய விவகாரத்திற்கு ஜிவி பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

12:54 PM (IST) Mar 30

வெயிலால் ஸ்கூலுக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவிக்கிறாங்க.. உடனே எக்ஸாம் நடத்தி லீவு விடுங்க.. அன்புமணி.!

குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:54 PM (IST) Mar 30

ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்.. அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை..!

சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக சில பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து பொறியியல் பிரிவு உதவி பொது மேலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

12:12 PM (IST) Mar 30

தீண்டாமை-லாம் இல்லைங்க.. நரிக்குறவர் குடும்பத்தை அனுமதிக்காதது ஏன்? பதறியடித்து விளக்கம் தந்த ரோகினி தியேட்டர்

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று முதல் திரையிடப்பட்டு உள்ளது. அப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டபோது, படத்தை பார்க்க ஏராளமான சிம்பு ரசிகர்கள் ஆவலோடு வந்திருந்தனர். அதேபோல் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் அப்படத்தை பார்க்க வந்திருந்தனர். மேலும் படிக்க

11:03 AM (IST) Mar 30

பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்லி... ஐஸ்வர்யா ராய்-க்கு ‘ஐஸ்’ வைத்த சிம்பு

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள், கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிம்புவின் பேச்சு ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்திருந்தது. அவர் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:04 AM (IST) Mar 30

ஷாருக்கான் மகனை விடாத போதை மோகம்... புதிதாக சரக்கு பிசினஸ் தொடங்கிய ஆர்யன் கான் - நடிகைகளுடன் பார்ட்டி வேற

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் புதிதாக சரக்கு பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதோடு அதற்காக நடிகைகளுக்கு பார்ட்டியும் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

10:01 AM (IST) Mar 30

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை ஒதுக்க சபாநாயகரிடம் நேற்று எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அவையில் இப்பிரச்னையை எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளது. 

09:22 AM (IST) Mar 30

Pope Francis: போப் பிரான்சிஸ்க்கு சுவாசத் தொற்றுநோய் பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

போப் பிரான்சிஸ்க்கு சுவாசத் தொற்றுநோய் பாதிப்பு காரணமாக ரோம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

09:21 AM (IST) Mar 30

விதைப் பையை நசுக்கி சித்ரவதை.. இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்.. கொதிக்கும் வைகோ..!

விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என வைகோ கூறியுள்ளார். 

மேலும் படிக்க

09:06 AM (IST) Mar 30

ஏஜிஆர்-ஆக அதகளப்படுத்தி... ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா சிம்பு? - பத்து தல விமர்சனம் இதோ

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள பத்து தல படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

08:04 AM (IST) Mar 30

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது... அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் படிக்க

07:47 AM (IST) Mar 30

Dasara review : பத்து தல... விடுதலைக்கு டஃப் கொடுக்குமா நானியின் தசரா? - முழு விமர்சனம் இதோ

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ள தசரா திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

07:12 AM (IST) Mar 30

தொப்பி, கண்ணாடி போட்டால் நீங்கள் எம்.ஜி.ஆரா? இபிஎஸ்-ஐ விமர்சித்த வி.பி. துரைசாமி..!

என்னுடைய அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன், கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர் என வந்துள்ளார்கள். நேற்றைக்கு ஒரு எம்ஜிஆர் வந்துள்ளார். இப்படி பல எம்ஜிஆர்களை பார்த்து உள்ளோம். தொப்பி, கூலிங் கிளாஸ் போட்டால் எம்ஜிஆர் என்றால் நீங்கள் கூட முயற்சி செய்யலாம். ஒரே ஒரு எம்ஜிஆரைத்தான் நாங்கள் பார்த்துள்ளோம் என இபிஎஸ்ஐ விமர்சித்துள்ளார். 

மேலும் படிக்க


More Trending News