Pathu Thala Review : ஏஜிஆர்-ஆக அதகளப்படுத்தி... ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா சிம்பு? - பத்து தல விமர்சனம் இதோ
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள பத்து தல படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இதில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் முதல் சிம்பு படம் இது என்பதால் காலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், சிம்புவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், மேள தாளங்கள் முழங்க இப்படத்தின் ரிலீசை கொண்டாடினர். இதனிடையே பத்து தல படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Cool Suresh : பத்து தல FDFS பார்க்க ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ
படம் பார்த்த நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : பத்து தல படத்தில் சிம்புவின் நடிப்பு கிளாஸ் ஆக இருக்கிறது. ஒபிலி என் கிருஷ்ணாவின் திரைக்கதை நல்ல டுவிஸ்ட்டுகள் நிறைந்து விறுவிறுவென இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் வேறலெவல். கவுதம் கார்த்திக்கிற்கு நல்ல கேரக்டர் சிறப்பாக நடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், பத்து தல சீட் நுனியில் பார்க்கும் அளவுக்கு விறுவிறுப்பாக உள்ளது. சிலம்பரசனின் நடிப்பு நெருப்பாக உள்ளது. கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அது பாசிடிவ் ஆக அமைந்துள்ளது. கவுதமிற்கு நேர்த்தியான ரோல். முதல் பாதியும், இரண்டாம் பாதியும் அதகளமாக உள்ளது. பத்து தல சிம்புவுக்கு ஹாட்ரிக் படமாக அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவில், பத்து தல சிம்புவின் கிளாஸ் மற்றும் மாஸ் ஆன படமாக அமைந்துள்ளது. கவுதம் கார்த்திக் நல்ல ரோல், முதல் பாதி முழுவதும் ஆனாயசமாக நகர்த்தி சென்றுள்ளார். சிம்புவுக்கு இது ஹாட்ரிக் என பாரட்டி பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், பத்து தல படத்தின் மிகப்பெரிய பாசிடிவ் முதல் பாதி தான். முதல் பாதி திரைக்கதையும் செம்ம ஸ்பீடு. படம் ஆரம்பிச்சதும் தெரியல, முடிஞ்சதும் தெரியல. சிம்பு தனி ஒருவனாக படத்தை தாங்கி உள்ளார். படத்தின் ஒளிப்பதிவு வேறலெவல். இயக்குனரும் சூப்பராக எடுத்துள்ளார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், பத்து தல கெத்து தல. சிலம்பரசனின் நடிப்பு தீயா இருக்கு. ஏ.ஆர்.ரகுமானின் இசை சூப்பர். படத்தின் திரைக்கதையை அருமையாக எழுதி உள்ளனர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் பரூக் பாட்ஷாவுக்கு பாராட்டுக்கள். காட்சிகள் அனைத்தும் பிரம்மிப்பாக உள்ளது, குறிப்பாக கிளைமாக்ஸ் என பாராட்டி உள்ளார்.
இதுதவிர பத்து தல திரைப்படம் கேஜிஎப் படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாகவும், படம் தெறிக்குது என ரசிகர்கள் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதனால் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு பின் பத்து தல மூலம் சிம்பு ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார் போல தெரிகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூலை வாரிக் குவிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்...Dasara review : பத்து தல... விடுதலைக்கு டஃப் கொடுக்குமா நானியின் தசரா? - முழு விமர்சனம் இதோ