காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சூரத் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பிணையில் விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

05:48 PM (IST) Mar 23
இசையமைப்பாளர், தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வரும் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவை மட்டமான மனிதர் என விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் படிக்க
04:01 PM (IST) Mar 23
குஷி திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை சமந்தா கரம்பிடித்தபடி புகைப்படம் இடம்பெற்று உள்ளது. தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். மேலும் படிக்க
03:44 PM (IST) Mar 23
கரூர் செந்தில் பாலாஜி ஒரு TASMAC கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தே ஆகனும் சொல்லிட்டாரு என்று டாஸ்மாக் சூப்பர்வைசர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
03:15 PM (IST) Mar 23
நாளை முதல் வருகிற 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02:37 PM (IST) Mar 23
சென்னை துறைமுகத்தில் அருமையான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. வேலை பற்றிய முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.
02:23 PM (IST) Mar 23
சென்னையை அடுத்த மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
01:36 PM (IST) Mar 23
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
01:14 PM (IST) Mar 23
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
12:52 PM (IST) Mar 23
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி, மோசடியாக பங்குகளின் மதிப்பை உயர்த்தியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றஞ்சாட்டியது.
12:02 PM (IST) Mar 23
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
11:12 AM (IST) Mar 23
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் 5 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
11:02 AM (IST) Mar 23
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், மீண்டும் தாக்கல் செய்தனர். மசோதா மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு இன்றே நிறைவேற்றப்பட உள்ளது.
10:43 AM (IST) Mar 23
கிருஷ்ணகிரி ஆணவக்கொலை தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் சட்டப்பேரவையில் பதிலளித்துள்ளார். அதில், ஜெகன் ஆணவக்கொலையில் சம்மந்தப்பட்டவர் அவதானப்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதி காக்கும் மண்ணாக உள்ள தமிழ்நாட்டில், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
09:53 AM (IST) Mar 23
தினமும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
09:30 AM (IST) Mar 23
எமரிட்டஸ் பேராயர் மார் ஜோசப் பொவத்தில் மறைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
09:20 AM (IST) Mar 23
சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது சனநாயக விரோதமாகும் என சீமான் தெரிவித்துள்ளார்.
08:54 AM (IST) Mar 23
சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
08:21 AM (IST) Mar 23
கலிபோர்னியா மாநிலத்தில் சமீபத்தில் புயல் தாக்கியதால் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
08:04 AM (IST) Mar 23
நெடுந்தீவு அருகே 2 விசைப்படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர்.
07:46 AM (IST) Mar 23
தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று. அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சி. இன்னும் சொல்லப்போனால், உலக அளவில் அதிக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களைக்கொண்ட கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது. தற்போது வரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம்.
07:22 AM (IST) Mar 23
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதிமுக நகராட்சி தலைவர் ராமலட்சுமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.