Asianet News TamilAsianet News Tamil

அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா? - சீமான் ஆவேசம்

சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது சனநாயக விரோதமாகும் என சீமான் தெரிவித்துள்ளார். 

Seeman said that it is not acceptable to arrest those who raise grievances of the government
Author
First Published Mar 23, 2023, 9:18 AM IST

குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், திரைப்பட காட்சிகளை வைத்து மீம் வெளியிட்ட வாய்ஸ் ஆப் சவுக்கு என்ற சமூக வலைதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத்துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல.

 

கைது-மிக மிக அதீதமானது

மாற்றுக்கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் அறிக்கையில், தமிழகத்திலுள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்; இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயனடைவார்கள் எனக் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என திமுக அரசு மாற்றிப்பேசி, தகுதி எனும் சொல்லாடலை புதிதாக இடைச்செருகும்போது எழும் விமர்சனத்தைத்தான் திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியோடு இணைத்து எள்ளல் செய்திருக்கிறார் தம்பி பிரதீப்.

Seeman said that it is not acceptable to arrest those who raise grievances of the government

ஜனநாயக விரோதம்

கேலிச்சித்திரங்களின் நவீனப்பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி நகைச்சுவைத்துண்டுகள். அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காகவே கைது நடவடிக்கை என்பது மிக மிக அதீதமானது. சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது சனநாயக விரோதமாகும் என சீமான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அதிமுகவோடு கூட்டணி முறிவு..? டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை...! மோடி, அமித்ஷாவை இன்று சந்திக்க திட்டம்

Follow Us:
Download App:
  • android
  • ios