Asianet News TamilAsianet News Tamil

ஒரு டாஸ்மாக் கடைக்கு 40 முதல் 50 ஆயிரம் தரணும்.. அமைச்சரே சொல்லிட்டாரு - வைரல் வீடியோ

கரூர் செந்தில் பாலாஜி ஒரு TASMAC கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தே ஆகனும் சொல்லிட்டாரு என்று டாஸ்மாக் சூப்பர்வைசர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Tasmac shops given commision order Minister senthil balaji viral video
Author
First Published Mar 23, 2023, 3:41 PM IST

தீபாவளி, பொங்கல், ஆங்கில வருட பிறப்பு போன்ற நாள்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிமாக இருக்கும். 

அவை விடுமுறை நாள்கள் என்பதை தாண்டி, பல்வேறு தரப்பினரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, வேறு இடங்களுக்கு பயணம் செய்வது என நெருங்கியவர்களுடன் மது அருந்துவது இந்ந நாட்களில் அதிகரித்து காணப்படும். எனவே, தமிழ்நாட்டின் டாஸ்மாக்கில் மது விற்பனை அத்தகைய தினங்களிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும் சூடு பறக்கும்.

Tasmac shops given commision order Minister senthil balaji viral video

இதையும் படிங்க..ஹிண்டன்பர்க்கின் அடுத்த டார்கெட்.!! அதானிக்கு அடுத்து மாட்டப்போகும் கம்பெனி எது தெரியுமா.?

தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருந்தார். நாளுக்கு நாள் தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். டாஸ்மாக்கில் சரியான சில்லறை வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு பாட்டிலுக்கும் இவ்வளவு என்று கமிஷன் பலருக்கு கொடுக்கப்படுவதாகவும், அதில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவ்வப்போது புகார்கள் எழும். இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவினார் சி.டி.ஆர் நிர்மல் குமார். அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், "கரூர் செந்தில் பாலாஜி ஒரு TASMAC கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தே ஆகனும் சொல்லிட்டாரு என்று டாஸ்மாக் (TASMAC) சூப்பர்வைசர் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் செய்த" வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்

Follow Us:
Download App:
  • android
  • ios