வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

02:49 PM (IST) Mar 15
அனைத்து பிரிவு அரசுப் பணிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூக நீதி என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
02:07 PM (IST) Mar 15
ஊட்டி அருகே உள்ள முதுமலையில் படமாக்கப்பட்டது ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
01:11 PM (IST) Mar 15
மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகரைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரசால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:22 PM (IST) Mar 15
ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய யானை ரகு, நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள், அவரின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
12:11 PM (IST) Mar 15
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த காதல் கணவரை இளம்பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:10 PM (IST) Mar 15
பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நூற்றுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசே அவரது நிர்வாகத்திற்கு எதிராக விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
12:10 PM (IST) Mar 15
திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11:41 AM (IST) Mar 15
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
11:19 AM (IST) Mar 15
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் மு.மாறன் இயக்கி உள்ளார். மேலும் படிக்க
11:05 AM (IST) Mar 15
சாமி ஊர்வலத்தின்போது ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10:27 AM (IST) Mar 15
நேற்று 43 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை பார்க்கலாம்.
09:52 AM (IST) Mar 15
ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி எறிந்த நபர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09:17 AM (IST) Mar 15
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
08:34 AM (IST) Mar 15
மாமன்னன் படத்தின் பிசினஸ் படுஜோராக நடந்து வருவதால், உதயநிதிக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட்டு உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. மேலும் படிக்க
08:21 AM (IST) Mar 15
மெட்டா நிறுவனம் தனது நிறுவனத்தில் இருந்து மேலும் 10,000 ஊழியர்களை நீக்குகிறது. இந்த செய்தி மெட்டா நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:52 AM (IST) Mar 15
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டி வரும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:52 AM (IST) Mar 15
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் தனது காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த காதலன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.