மின் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 23ம் தேதி பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

08:41 PM (IST) Jul 19
முன்னணி நடிகைகள் பலர் அரைகுறை ஆடையுடன் வந்து கலந்து கொள்ளும் நிலையில் கேஜிஎப் என்னும் மிகப்பெரிய வெற்றி பட நாயகி அடக்கமாக வந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க...கோப்ராவிற்கு பிறகு சேலை கிளாமருக்கு மாறிய கேஜிஎப் நாயகி!
08:00 PM (IST) Jul 19
அவர்கள் எங்களை சாட்டிலைட் நட்சத்திரங்கள் என்று அறிந்தார்கள் எங்களுக்கு திரையரங்கில் ரிலீஸ் கிடைத்த நேரம் இது. இப்போது நாங்கள் நட்சத்திரங்களாக இருக்கிறோம் என சுதீப் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...நாங்கள் தற்போது சேட்டிலைட் நட்சத்திரங்கள் இல்லை..கிச்சா சுதீப்!
07:55 PM (IST) Jul 19
கருப்பு வண்ணத்தில் இருபுறமும் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டு தொடையழகை காட்டியபடி அவர் கொடுத்துள்ள போஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.
மேலும் படிக்க...கொடிக்கயிற்றை தொங்கவிட்டு..கிழிந்த கவனில் தமன்னா..சிவத்த பொண்ணு..கருப்பு உடை கிளாமரில்!
06:33 PM (IST) Jul 19
மருதநாயகம் படத்தை கமல் சார் என்னிடம் கொடுத்து இயக்கச் சொன்னால் நிச்சயம் ஏற்க மாட்டேன் அது அவருடைய உழைப்பு என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
மேலும் படிக்க...மருது நாயகமாக மாறிய கமல்..சாப்பிட்ட கையோடு மெய் சிலிர்த்து நின்ற லோகேஷ்..
06:09 PM (IST) Jul 19
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அல்லது அதற்கு பின்னரோ வேலை நிறுத்தம் செய்வதாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
05:39 PM (IST) Jul 19
நித்யா மேனன் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் மலையாள உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் தான் அவர் மணமுடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க...முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?..
05:39 PM (IST) Jul 19
தமிழக அரசின் வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...மேலும் படிக்க
05:27 PM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்.பி., செல்வக்குமார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத்தும், எஸ்.பியாக பகலவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
04:49 PM (IST) Jul 19
பேட்டியில் புஷ்பா பார்ட் 2 வில் நானும் இருக்கிறேன். இது மிகவும் நல்ல கதை. பாகம் மூன்றும் தயாராகும் என இயக்குனர் தன்னிடம் தெரிவித்ததாக பகத் பாசில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...புஷ்பா 3 -ம் பாகத்தை கன்பார்ம் செய்த இயக்குனர்..பகத் பாசில் கொடுத்த ட்ரீட் நியூஸ்!
04:48 PM (IST) Jul 19
தமிழ் சினிமாவிற்கும் சம்பந்தமில்லாத புது விதமான முயற்சியில் இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட் அடிப்படையில் எடுத்து உள்ளேன். அதில் எனக்கு வியாபார நோக்கம் இல்லை கூறியுள்ளார் பார்த்திபன்.
மேலும் படிக்க... சர்ச்சை முடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாயகியுடன் சாமி தரிசனம் செய்த பார்த்திபன்
04:05 PM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக பகலவன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரும் மாற்றபட்டதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
03:22 PM (IST) Jul 19
தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 2021-22ம் ஆண்டில் 78 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. 560 வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று எம்.பி மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
03:21 PM (IST) Jul 19
யூ டியுப்பர் சவுக்கு சங்கர் மீது நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை கிளை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
03:09 PM (IST) Jul 19
காஃபி வித் கரனில் நடிகர் அக்ஷய் குமார், நடிகை சமந்தா பங்கேற்றுள்ளனர். இதில் பல கேள்விகளும் இருவரும் வெளிப்படையாக பதில் அளித்துள்ள நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் மாஸ் டேன்ஸ் ஒன்றையும் ஆடியுள்ளனர்.
மேலும் படிக்க...அச்சசோ.. சமந்தாவை அலேக்காக தூக்கியா அக்ஷய் குமார்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ!
03:03 PM (IST) Jul 19
கருப்பு வண்ணத்தில் இரு பிட்டுத்துணிகளை சுற்றியது போன்ற ஸ்டைலில் அவர் அணிந்துள்ள உடையுடன் கூந்தலை அவிழ்த்துவிட்டு கிக் போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க..கொசு வலையில் தைத்த உடையில்.. பக்க கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..
02:23 PM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் குழு அமைப்பு.
02:16 PM (IST) Jul 19
நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என்பதற்கு, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. நீட் விலக்கு மசோதா குறித்து எம்.பி வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
01:56 PM (IST) Jul 19
சீராக மின்சாரம் வழங்குவதற்கு திமுக அரசுக்கு வக்கு இல்லை என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில்கூட மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கூறியது, ஆனால் நாங்கள் அப்போதும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க
01:46 PM (IST) Jul 19
சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
01:31 PM (IST) Jul 19
பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை, என்னதான் அழகாக மேக்கப் போட்டு கொண்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ், அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றிற்கு போஸ் கொடுத்தாலும், அதில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் இது நாம் தானா? என கேட்க்கும் அளவிற்கு இருக்கும். மேலும் பார்க்க...
01:01 PM (IST) Jul 19
ரயிலில் பாடிய பெண்ணை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க...ரயிலில் பாடிய பெண்ணை.. வலைபோட்டு தேடும் டி இமான் !
12:57 PM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மறு பிரேத பரிசோதனை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது * கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி சென்ற அதிகாரிகள்
12:44 PM (IST) Jul 19
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் சான்றிதழ் இழந்த மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் இறந்த மாணவியின் தாய்க்கு அரசு வேலை வழக்குவது தொடர்பாகவும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இது அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க
12:28 PM (IST) Jul 19
கும்பகோணம் அணைக்கரை மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூன்று இளைஞர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அடித்து செல்லப்பட்ட இளைஞர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
12:06 PM (IST) Jul 19
நீட் தேர்வில் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
12:02 PM (IST) Jul 19
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. 11:53 AM (IST) Jul 19
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11:27 AM (IST) Jul 19
11:26 AM (IST) Jul 19
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்த வருகின்றனர். விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11:09 AM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கில் இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்தனர். அவர்களில் 3 பேருக்கு கையிலும் ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
11:06 AM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மறு பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் மாணவியின் தந்தை தரப்பு மருத்துவரை சேர்க்கவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:00 AM (IST) Jul 19
காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
10:18 AM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்ம்மான முறையில் இறந்தது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து தமிழக அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
10:08 AM (IST) Jul 19
கனியாமூர் பள்ளி மாணவியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.
10:06 AM (IST) Jul 19
அமெரிக்காவில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை திரும்பினார். மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக சென்னை வருகை தந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
10:04 AM (IST) Jul 19
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்க இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு சந்திப்பு. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, கனிமொழி எம்.பி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலளர் இறையன்பு உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.
09:35 AM (IST) Jul 19
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
09:34 AM (IST) Jul 19
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ளார்.
09:09 AM (IST) Jul 19
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தப்பட இருப்பதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
08:54 AM (IST) Jul 19
அரசியலுக்காக ஆதரவுகரம் நீட்டாமல், வன்முறையை கட்டவிழ்த்த சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வருவதோடு இந்த கலவரத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.