கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி முதல்வர் அறையில் ஆணுறை வந்தது எப்படி..? மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகிகள் பதில்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்ம்மான முறையில் இறந்தது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து தமிழக அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பொய்யான வீடியோ
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்ன சேலத்தில் சக்தி என்கிற தனியார் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் இருந்த மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திடீர் என ஏற்பட்ட வன்முறை பள்ளியில் உள்ள பேருந்துகள், வகுப்பறைகள், அலுவலகம் என அனைத்தும் தீக்கிரையானது. இதனையடுத்து பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மர்ம நபர் நடமாடுவது போல் வீடியோ ஒன்று வெளியானது மேலும் பள்ளி முதல்வர் அறை அருகே ஆணுறை கிடந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த வீடியோவை பள்ளி வளாகம் என தவறுதலாக பதிவிட்டுள்ளதாகவும் இந்த வீடியோ பொய்யானது என தெரிவித்திருந்தது.
எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
மாணவர்களை கண்டிக்காதீர்கள்
இந்தநிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை வன்முறை கும்பல் சேதம் ஏற்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளிகள் இயங்காது என தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை தனியார் பள்ளி நிர்வாகிகள் திரும்ப பெற்றனர். இந்தநிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தனியார் பள்ளி நிர்வாகி நந்தகுமார் மற்றும் இளங்கோவன், பள்ளிகளில் இது போன்ற பிரச்சனை வருவதால் ஆசிரியர்களுக்கு கூறிவிட்டோம் இனி மாணவர்களை கண்டிக்காதீர்கள், திட்டாதீர்கள், அடிக்காதீர்கள் என சொல்லிவிட்டோம், பாடங்களை நடத்த முடிந்தால் நடத்துங்கள் இல்லையென்றால் பெற்றோரை கூப்பிட்டு புகார் தெரிவியுங்கள் என்று மட்டும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
ஆணுறை எப்படி வந்தது..?
பள்ளிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டு கூறப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றதை மட்டும் கூறுபவர்கள், அந்த பள்ளியில் எத்தனை விஐபிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும் என கூறினார். தவறான பள்ளிக்கூடமாக இருந்தால் விஐபிகள் அந்த பள்ளிக்கூடத்துக்கு செல்வார்களா எனவும் தனியார் பள்ளி சங்க நிர்வாகி இளங்கோவன் கேள்வி எழுப்பினர். பள்ளியில் தவறு நடந்ததை நீங்கள் பார்த்தீர்களா? நானும் பார்க்கவில்லை விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணை முடிவில் தான் உண்மை தெரியவரும் எனக்கூறினார். பிரின்ஸ்பல் அறையில் ஆணுறை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த தனியார் பள்ளி நிர்வாகி நந்தகுமார், அங்கு ஆணுறை கிடந்ததை நாங்கள் பார்த்தமா..? நீங்கள் பார்த்தீர்களா போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் கொண்டு சென்று ஆணுறையை அங்கே போட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்