நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் (ராய்பூர்) இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

10:39 PM (IST) Jan 21
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,பாஜக ஆகிய கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
09:46 PM (IST) Jan 21
நாம் அனைவரும் பயணத்திற்கு என்று பல நேரங்களில் திட்டமிடுவோம். அது சில நேரங்களில் மட்டுமே சரியாக அமையும். மலைவாசஸ்தலங்களின் குளிர்ந்த காற்றை ரசிக்க சுற்றுலா பிரியர்களுக்கென சூப்பரான 5 இடங்களை இந்த பதிவில் காணலாம்.
09:01 PM (IST) Jan 21
ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக இருக்குமா ? அல்லது பாஜக தனித்து போட்டியிடுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
08:00 PM (IST) Jan 21
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,பாஜக ஆகிய கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
07:17 PM (IST) Jan 21
மும்பையில் மெட்ரோ திட்டத்தை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
06:40 PM (IST) Jan 21
11 கிலோ எடையில் மார்பகங்கள் பெரிதாக வளர்ந்து அரிதான நிலையில் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
04:26 PM (IST) Jan 21
இன்றைய வாழ்க்கை முறையில், நாம் உண்ணும் உணவு வகைகளால் புற்றுநோய்க்கான ஆபத்து வேகமாக அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஐந்து உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
03:58 PM (IST) Jan 21
மும்பையில் மனநிலை சரியில்லாத சிறுமியை 3 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
03:13 PM (IST) Jan 21
எனக்கு எதிராக பிரதமர் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்தாலும் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா.
02:52 PM (IST) Jan 21
சென்னையில் இளம்பெண்களை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12:44 PM (IST) Jan 21
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12:43 PM (IST) Jan 21
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
11:07 AM (IST) Jan 21
குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை தருவதாக கூறிவிட்டு 20 மாதங்களாக கணக்கெடுத்து வருகிறது என திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். '\
10:17 AM (IST) Jan 21
சென்ட்ரலிலிருந்து விமான நிலையம் வரை, கோயம்பேடு வழி செல்லும் ரயில்கள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற வழித்தடங்களில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10:07 AM (IST) Jan 21
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு ழுழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10:06 AM (IST) Jan 21
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை அடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
07:56 AM (IST) Jan 21
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:36 AM (IST) Jan 21
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உங்கள் கட்சிகார தம்பி வெற்றி பெற வாக்கு சேகரிப்பது என்பது அரசியலின் அவலம் என திருமாவளவனை ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்.
07:35 AM (IST) Jan 21
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருட்களால் சீரழிந்து வருகின்றனர். காவல்நிலையம், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.