ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட்டால் திமுக இருக்கிற இடமே தெரியாமல் போய்விடும்.. ஸ்டாலினை அலறவிடும் இபிஎஸ்.!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆனபிறகும், இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தலின் போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேச்சு.
குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை தருவதாக கூறிவிட்டு 20 மாதங்களாக கணக்கெடுத்து வருகிறது என திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு எம்ஜிஆர் பிறந்தத நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி;- 20 மாத விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தத பயனும் இல்லை. திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் நடைபெற்று வருகிறது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே திமுக அரசின் நோக்கம். நல்ல கலெக்ஷன் கொடுக்கும் அமைச்சர்களே ஸ்டாலினுக்கு சிறந்த அமைச்சர்கள். அதிமுக அரசு செயல்படுத்திக்காட்டிய குடிமராமத்து திட்டத்திற்கு விடியா திமுக அரசு மூடுவிழா கண்டுள்ளது. திராவிட மாடல் அரசு என மக்களை ஏமாற்றாதீர்கள் என ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க;- விடியா திமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்... முதல்வர் ஸ்டாலினை விளாசிய சி.வி.சண்முகம்..!
மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆனபிறகும், இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தலின் போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேச்சு. அதிமுக ஆட்சி மக்களுக்கான பொற்கால ஆட்சி, திமுக ஆட்சி ஸ்டாலின் குடும்பத்திற்கான ஆட்சி. முதியோர் உதவித்தொகையை நிறுத்தி அவர்கள் வயிற்றில் அடித்தது தான் திராவிட மாடல் சாதனையாகும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை விடியா திமுக அரசு வஞ்சித்துவிட்டது.
அரசு மருத்துவமனைகளில் 10,000 நவீன படுக்கைகளை கொண்டு வந்தது அதிமுக அரசு. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை ஸ்டாலின் தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வருகிறார். ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட்டால், திமுக இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். விடியா திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விரை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பொம்மை முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். நாட்டு மக்களுக்காக உழைத்த தலைவர்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி. வீட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி.
இதையும் படிங்க;- நின்றால் விளம்பரம், நடந்தால் விளம்பரம்,..! தவறான புள்ளி விவரங்களை வெளியிடும் ஸ்டாலின்-விளாசும் எடப்பாடி
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியது அதிமுக அரசின் சாதனையாகும். ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய் வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என உதயநிதி பொய் வாக்குறுதி கொடுத்தார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.